Thursday, 11 May 2017

நாடி முறையில் பலன் காணுதல்

நாடி முறையில் பலன் நடக்கும் காலத்தை துல்லியமாக அறிவது எப்படி....

குரு வணக்கம்

நாடி முறையில் பலன்கள் உறுதியாக நடக்கும் என்று கணித்த பின் அந்த பலன் எப்போது நடக்கும் என்பதை பார்க்க வேண்டும் இதை உதாரண ஜாதகம் மூலம் அறியலாம்.

பிறப்பு ஜாதகத்தில் மகரத்தில் சுக்கிரன் உள்ள ஜாதகருக்கு எப்போது திருமணம் நடக்கும்

வருடம் அறியும் முறை

கோச்சாரத்தில் குரு அல்லது சனி பிறப்பு ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1,2,5,9 ராசிகளில் அடுத்து எப்போது வரும் என்பதை பார்க்க வேண்டும்

மாதம் அறியும் முறை

கோச்சாரத்தில் சூரியன் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1,2,5,9 ராசிகளில் அடுத்து எப்போது வரும் என்பதை பார்க்க வேண்டும்

நாள் அறியும் முறை

கோச்சாரத்தில் சந்திரன் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1,2,5,9 ராசிகளில் அடுத்து எப்போது வரும் என்பதை பார்க்க வேண்டும்

அதாவது பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் மகரத்தில் அமர்ந்த ஜாதகருக்கு,
கோச்சாரத்தில் குரு அல்லது சனி & சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் மகரம், கும்பம், ரிசபம், கன்னி இந்த ராசியில் ஏதாவது ஒரு ராசியில் இருக்கும் போது திருமணம் நடைபெறும்.

இதே போல வீடு கட்டுதல், கார் வாங்குதல் முதலிய நிகழ்வுகளையும் எளிதாக அறியலாம்

Acarya Senthilkumar
7200044010
Adambakkam, Chennai.

இரு மணவாழ்வும் ஜோதிடமும்

நாடி முறையில் இரண்டு திருமணம் யாருக்கு

(இது ஆண் ஜாதகத்திற்கு மட்டும்)

சனியுடன் ஒரு பெண் கிரகமும்

குருவுடன் ஒரு பெண் கிரகமும்

சேர்க்கையில் இருக்க வேண்டும். நிற்க.

இதில் ஏதாவது ஒரு பெண் கிரகத்துடன் ராகு கேது சம்பந்தப்பட ஒரு பெண் பிரிந்து சென்றவுடன் இரண்டாவது திருமணம்.

ராகு கேது சம்பந்தம் இல்லை எனில் முதல் மனைவி இருக்கும் போதே, மனைவிக்கு தெரியாமல் இன்னொரு திருமணம்

இதுமட்டுமல்ல, இன்னும் சில விதிகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று....

ஒளியும் ஒலியும்

ஒளியும் ஒலியும்

ஒளி சூரியன்
ஒலி புதன்
(புதனே தொண்டைக்கும் நாக்கிற்கும் காரகன். மேளம் முரசு மத்தளம் போன்ற வாத்தியங்களில் தோல்தான் பிரதானம்)

சூரியன் கடவுள்
புதன் மந்திரங்கள், சப்தங்கள், ஒலி

இறை வழிபாட்டில் இவையே பிரதானம்

தொலைக்காட்சியில் சுக் புதன் காரகம் பெறுகின்றன.

பூர்வீக சொத்து

பூர்வீக சொத்து யாருக்கு இருக்காது

பாரம்பரிய முறை

1) ஒரு நீச கிரகம் பூர்வ புண்ணியாதிபதியின் நட்சத்திரத்தில் அமர்ந்து

பூர்வ புண்ணியாதிபதி 8/12க்குடையவன் அல்லது அதில் அமர்ந்த கிரகத்தின் சாரம் பெற்றால் பூர்வீக சொத்துக்கள் எதுவும் இருக்காது.

2)பாட்டனாரை குறிக்கும் கிரகம் ராகு. ராகு 8 அல்லது 12க்குடையவனால் பார்க்கப்பட்டாலோ அல்லது அவர்களது சாரம் பெற்றாலோ பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது.

நாடி முறை

சூரியன் தந்தையை குறிப்பவர்.
சூரியனுக்கு முக்கியமான பகை கிரகங்களான சனி மற்றும் கேதுவின் தொடர்பு இருந்தால் பூர்வீக சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அனுபவிக்க முடியாது.

12/05/2017 ராசி பலன்

12/05/2017 ராசி பலன்

ஹேவிளம்பி வருடம் சித்திரை மாதம் 29ஆம் தேதி
வெள்ளிக்கிழமை, அனுஷம் நட்சத்திரம், துவிதியை திதி

மேஷம்
சந்திராஷ்டம தினம் கவனமாக இருக்கவும்
வெற்றி, லாபம், மகிழ்ச்சி, நண்பர்கள் ஆதரவு, மூத்த சகோதரர்களால் நன்மை

ரிஷபம்
பதவி, புகழ், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், மனைவியின் உறவினர்களால் நன்மை, தன வரவு, இளைய சகோதர்களால் தீமை,

மிதுனம்
அதிர்ஷ்டமான நாள், தொலைதூர பயணம் சம்பந்தமான முயற்சிகள் நடைபெறும், ஆலய வழிபாடு, சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும்

கடகம்
விமர்சனங்கள் உண்டாகலாம், துணை மூலம் தனவரவு, குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக முயற்சி செய்யலாம், கேளிக்கை, பொழுதுபோக்கு

சிம்மம்
கூட்டு முயற்சிகளில் வெற்றி, புது வியாபாரம் துவங்க நல்ல நாள், வாடிக்கையாளர்கள் சந்திப்பு, துணையுடன் அன்யோன்யம்

கன்னி
புதுமுயற்சி, போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளுதல், கடன் வாங்கும் சூழ் நிலைகள் உண்டாகலாம், நோய் உண்டாகி விலகும், சிறுபயணம் ஏற்படும்

துலாம்
வரவு, கேளிக்கை, மகிழ்ச்சி, பொழுது போக்கு, குழந்தைகளால் மகிழ்ச்சி, தேக ஆரோக்யம் மேம்படும், தியானம், குலதெய்வ வழிபாடு

விருச்சிகம்
நற்சிந்தனை, கீர்த்தி, புது விசயங்களை கற்றுக்கொள்வீர்கள், தாயிடம் ஆசி பெறுதல், புது தொழில் உண்டாகும், மனைவிக்கு வேலை வாய்ப்பு

தனுசு
புதுமுயற்சிகளில் ஈடுபடுவீர்கள், சிறு பயணங்கள் உண்டாகும், தகவல் தொடர்பு, வீடு வாகனம் விற்க முயற்சி செய்வீர்கள்,

மகரம்
தனவரவு உண்டாகும், சுகபோஜனம் நடக்கும், தானியங்கள் வாங்குவீர்கள்,
வெற்றிகள் உண்டாகும், லாபம் உண்டு, நண்பர்கள் உதவுவார்கள்

கும்பம்
நற்சிந்தனை, கீர்த்தி, புகழ், கெளரவம் உண்டாகும், பதவிகள் உண்டாகும்,
புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும்

மீனம்
பயணங்கள் பற்றி சிந்தனைகள் உண்டாகும், இறை வழிபாடு நன்மை தரும்,
ஆராய்ச்சி, செலவுகள் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்