Sunday 23 April 2017

பரிகார சூட்சுமங்கள் - 2

மோட்சம் என்றால் கர்மங்களில் இருந்து விடுபடுதலை குறிக்கும்

ஜோதிடத்தில் மோட்ச ராசிகள்
கடகம் விருச்சிகம் மீனம் ஆகும்

கடகத்தில் 
உச்சமடையும் சுப கிரகம் குரு
நீச்சமடையும் பாவ கிரகம் செவ்வாய்

விருச்சிகத்தில் உச்சமடையும் கிரகம் கேது
நீசமடையும் கிரகம் சந்திரன்

மீனத்தில் உச்சமடையும் கிரகம் சுக்கிரன்
நீசமடையும் கிரகம் புதன்

குருவும் சுக்கிரனும் தங்கம் மற்றும் ஆபரணங்களை குறிக்கும். சுக்கிரன் விலை உயர்ந்த ஆடைகளை குறிப்பார்

சந்திரன் மனம் மற்றும் உடலை குறிப்பார்
புதன் புத்தியை குறிப்பவர்.

அந்த காலத்தில் செல்வந்தர்கள் அரசர்கள் அமைச்சர்கள் விலை உயர்ந்த தங்கம், ஆபரணங்கள், பட்டு வஸ்திரங்கள் கோவிலுக்கு தானமளித்து தங்களது உச்சகர்மங்களில் இருந்து மனதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசர்கள் போரில் பலரை வதைப்பதால் அதிகமான பாவ கர்மங்கள் உண்டாகின்றது

செல்வந்தர்கள் செழிப்பாக இருப்பதால் பலருடைய பொறாமை பார்வை அவர்களுக்கு தோஷம் ஏற்படுகின்றது.

எனவே அவர்கள் மேற்சொன்ன பொருட்களை கோவிலுக்கு தானமளித்து தமது கர்மங்களிலில் இருந்து விடுபட்டுள்ளனர்.

பரிகாரம் சொல்லும் போது
ஏழைகளுக்கு பகுதி 1 இல் (முன் பதிவில்) உள்ளது போல சொல்ல வேண்டும்

செல்வந்தர்களுக்கு இப்பதிவில் சொன்னது போல சொல்ல வேண்டும்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்