Saturday 26 August 2017

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை

குரு பெயர்ச்சி பலன்கள் 3
(பொது பலன்கள்)

இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பகுதியை படிக்கவும். இல்லை எனில் புரியாது.
-------------------------------------------------------------------
துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் சனி இருக்கப் பிறந்தவர்களுக்கு

இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். சக பணியார்கள் உதவுவார்கள். அண்ணன், பெரியப்பா போன்றவர்களுடன் உறவு மேன்படும். உங்கள் நலம்விரும்பிகள் வேலையில் உதவுவார்கள். வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு
சொல்லிகொடுத்த குருவை சந்தித்து ஆசி பெறுவது நன்மை பயக்கும்.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் குரு இருக்கப் பிறந்தவர்களுக்கு

உடலில் ஜீவ சக்தி அதிகரிக்கும். நலம்விரும்பிகள் உதவுவார்கள்.
மதிப்பு மரியாதை உயரும். உடல் உபாதைகள் நீங்கி உற்சாகம் கூடும்.
உங்கள் குருவிடம் ஆசிகள் பெறுவது, யானையிடம் ஆசி பெறுவது நன்மையை தரும். செல்வம் உண்டாகும்.
-------------------------------------------------------------------
துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் ராகு இருக்கப் பிறந்தவர்களுக்கு

வெளி நாடு அல்லது வெளிமாநிலம் செல்ல வாய்ப்புகள் வரும்.  அந்நியர்கள் உதவுவார்கள். சிலர் அந்நிய பாஷைகள் கற்று கொள்வீர்கள். உடல் உபாதைகள், நோய்கள் வரலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு.
-------------------------------------------------------------------
துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் கேது இருக்கப் பிறந்தவர்களுக்கு

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். துறவு மனப்பான்மை மேலோங்கும்
மன விரக்தி உண்டாகும். சிலர் யோகா, தியானம் கற்கலாம்.
அந்நியர்கள் உதவுவார்கள். சிலர் மாற்று மருத்துவம் படிப்பார்கள்.
சித்தர்கள் முனிவர்கள் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட நன்மை உண்டாகும்

குரு பெயர்ச்சி பலன்கள் 2

குருவே சரணம் குருவே துணை

குரு பெயர்ச்சி பலன்கள் 2
(பொது பலன்கள்)


காலப்புருஷ லக்னமான மேஷத்திற்கு 9 மற்றும் 12 ஆம் வீட்டிற்குரியவர் குரு.

நாடி ஜோதிடத்தில் ஆண் ஜாதகத்தில் ஜாதகரை குறிப்பவர் குரு.
பெண் ஜாதகத்தில் ஜாதகியை குறிப்பவர் சுக்கிரன்.

ஐப்பசி, மாசி, ஆனி மாதம்  1,5,9
மார்கழி, சித்திரை, ஆவணி மாதம் 3,7,11
புரட்டாசி, கார்த்திகை மாதம் 2,12
மேற்சொன்ன மாதங்களில் பிறந்தவர்கள்

புகழ் உண்டாகும். தந்தை மகன் இடையே இருந்த கறுத்து வேறுபாடுகள் நீங்கி உறவு மேலோங்கும். பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கண்டிப்பாக பதவி உயர்வு உண்டு. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறப்பு உண்டாகும். நிர்வாகத்திறன் கூடும். தந்தை அல்லது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவி செய்வார்கள். நோய்கள் குணமாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்களுக்கு

அலைச்சல், பயணங்கள் உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். போஷாக்கு உணவுகள் கிடைக்கும். தாய் மகன் உறவு நன்றாக இருக்கும். தீர்த்த யாத்திரைகள் உண்டாகும். தானிய சேர்க்கை உண்டு.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் சுக்கிரன் இருக்க பிறந்தவர்களுக்கு

தன வரவு நன்றாக இருக்கும். விலை உயர்ந்த புத்தாடைகள் வாங்குவீர்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.  சொகுசுப் பொருட்கள் சேர்க்கை உண்டு.
திருமணமாகாத ஆண்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் செவ்வாய் இருக்க பிறந்தவர்களுக்கு

உடல் வலுப்பெறும். கோபம் அதிகமாகும். கடன் வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும். ஒரு சிலருக்கு இருதய பாதிப்பு வரலாம். வீரியம் அதிகமாகும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்.
சிறிய அளவில் அடிபடலாம். திருமணமாகத இளம்பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும்

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் புதன் இருக்க பிறந்தவர்களுக்கு

புதிதாக ஏதேனும் படிக்க துவங்குவீர்கள். நண்பர்கள் வட்டம் அதிகரிக்கும். இளம் வயதினருக்கு காதல் மலரும். உடலில் இளமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புத்தகங்கள் வாங்குவீர்கள்.

₹₹₹₹₹₹₹₹₹ தொடரும். ₹₹₹₹₹₹₹₹₹₹₹

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலிமை மற்றும்
கோட்சார குருவின் பார்வைகளின் வலுவிற்கேற்ப பலன்களின் அளவுகள் மாறலாம். ஆனால் மேற்சொன்ன பலன்கள் நடைபெறும்.

ராகு கேதுக்கள் இவற்றில் சேர்ந்தால் பலன்கள் நடைபெறுவதில தடைகள் உண்டாகும்

ஆச்சார்யா @ 7200044010

குருப்பெயர்ச்சி பலன்கள் 1

குருவே சரணம் குருவே துணை

குருப்பெயர்ச்சி பலன்கள் 1.

நாடி முறையில் கிரக பெயர்ச்சி பலன்கள் அறிவதற்கு முன்பு நாடி ஜோதிடத்தில் சில முக்கிய அடிப்படை விசயங்களை பார்ப்போம்

நாடியில் எந்த கிரகமும் தனித்து பலன்களை தருவதில்லை

ஒரு கிரகம் தான் இருக்கும் வீட்டில் இருந்து 1,2,5,7,9 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களை வலிமையாக பார்க்கும்

3,11,12 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களை மிக குறைந்த வலிமையுடன் பார்க்கும்

ராகு கேதுக்கள் 1,5,9,12 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களை மட்டும் பார்க்கும்

மேற்சொன்ன படி கிரகங்கள் இருந்தால் அதனை கிரக சேர்க்கையாக எடுத்துக் கொள்ளலாம்

 பொதுவாக 4,6,8,10 இல் கிரகங்கள் இருப்பின் கிரக சேர்க்கை இல்லை.

பாரம்பரிய முறையில் குரு பெயர்ச்சி பலன்கள் சந்திரனை மட்டுமே அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்றது.

ஆனால் நாடி முறையில் எழுதினால் ஒவ்வொரு கிரகத்திற்கும் எழுத வேண்டும்.

குருப்பெயர்ச்சி ஆனது கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.

எனவே உங்கள் ஜாதகத்தில் பின்வரும் ராசிகளில் கிரகம் இருந்தால் அந்த கிரகங்களை குரு பார்ப்பார். அதனால் உங்களுக்கு ஏற்படும் பலன்களை நாம் பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தில் துலாம், விருச்சிகம்,  கும்பம், மேஷம், மிதுனம் இவற்றில் எந்த கிரகங்கள் இருந்தாலும் அந்த கிரகங்களை குரு வலிமையுடன் பார்ப்பார்

உங்கள் ஜாதகத்தில் தனுசு, சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் உள்ள கிரகங்களை குறைந்த வலுவுடன் பார்ப்பார்

-ஆச்சார்யா.

Thursday 17 August 2017

மீன ராசியும் ரகசியங்களும்

மீன ராசி எப்போதும் பல மர்மங்களை உள்ளடக்கியது.

மீனின் ரகசிய வடிவம் எண் எட்டு.
பாதங்களின் ரகசிய வடிவம் எண் எட்டு
இன்பினிட்டியின் ரகசிய வடிவம் எண் எட்டு

இன்பினிட்டி உருவமானது டாரட் கார்டில் மெஜிசியன் படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் உருவமானது எட்டு என்ற எண் படுக்கைவாட்டில் குறியிடப்பட்டிருக்கும். மீனராசி காலப்புருஷனுக்கு படுக்கை ராசியாகும். இங்கு இருக்கும் ரேவதி நட்சத்திரம் கால் பாதங்களை குறிக்கும். அதில் உச்சமடையும் கிரகம் சுக்கிரன். இதனால் தான் கோகுலாஷ்டமி அன்று வீட்டில் பாதசுவடுகளை மாக்கோலம் கொண்டு கோலமிடுகின்றோம்.

எண் 8 இல் பிறந்தவர்களுக்கு பல ரகசியங்களை உணரும் சக்தி உண்டு.

இதை நான் எழுத வேண்டிய காரணம், வேத ஜோதிட முறையில் எனது பிறந்த எண் 8, மீன ராசி மீன லக்னம்.

செல்வ வளம் பெருக, ஒவ்வொரு மாதமும் ரேவதி நட்சத்திர தினம் அன்று வீட்டில் பாதசுவடு கோலங்களை இட்டு செல்வத்தை பெருங்கள்... காசு பணம் துட்டு மணி மணி....

ஆச்சார்யா
7200044010


Monday 12 June 2017

நாடி ஜோதிடம் பயிற்சி

திருச்சியில் இரண்டு நாட்கள் பிருகு நந்தி நாடி ஜோதிட வகுப்புகள் எடுக்க இருக்கின்றேன்.

விருப்பமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


முன்பதிவு அவசியம்.

ஆச்சார்யா செந்தில்குமார்.
@7200044010.

இடம், கட்டணம், நாள் பின்னர் தெரிவிக்கப்படும்

Study Materials Will be Provided

#Trichy #Nadi #Astrology# Astrology classes in trichy#நாடி ஜோதிட வகுப்புகள்# திருச்சி

Saturday 3 June 2017

பாசக்கயிறு

சனி கேது பாசக்கயிறு

சனி ஆயுள்காரகன்
கேது சுருக்குபவன், மோட்சகாரகன், விடுதலை அளிப்பவன்

எமன் பாசக்கயிறை கொண்டுதான் மக்களின் கர்மா முடிந்தவுடன் உயிரை பறிக்கிறார்.

சனி ராகு
கர்மங்களை பெருக்கும்,
பாவங்களை சேர்க்கும்
பைரவர் அம்சம்

சனி கேது
கர்மங்களை தடை செய்து சுறுக்கும் தன்மை கொண்டது. பாவங்களை சுறுக்கும்.
எமன் அம்சம்.

சூரியன் செவ்வாய் சனி கேது

உண்மையான சிவனடியார்களை உயிரை பறிக்க எமனுக்கு அனுமதி இல்லை. அவர்களின் உயிரை எடுக்கும் அதிகாரம் சிவபெருமானின் பூதகணங்களுக்கு மட்டுமே உண்டு. செவ்வாய் அதிகாரத்தினை குறிப்பவர்.

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்