Monday 8 May 2017

சூரியனும் அக்னி நட்சத்திரமும்



சூரியனும் அக்னி நட்சத்திரமும்

சூரியன் ஒரு ராஜ கிரகம். க்ஷத்திரிய வம்சம் ஆகும்.
க்ஷத்திரிய வம்சம் தனக்கோ, தனது வீரத்திற்கோ, தனது குடிகளுக்கோ ஒரு பிரச்சினை என்றால் வீரு கொண்டு எழுந்து எதிராளியை துவம்சம் செய்யும்.

துலாத்தில் வலிமை இழந்த சூரியன் பரணி 3 ஆம் பாதத்தில் செல்லும் போது வீரு கொண்டு எழுந்து அக்னி பிழம்பாய் தகிக்கின்றது. பரணி 3 ஆம் பாதம் நவாம்சத்தில் துலாம் ராசியில் வரும்.

ராஜாக்கள் கோபம் அடைந்தால் உடனே உடைவாளை உருவி எதிரியை கொன்று முடித்தால் மட்டுமே சாந்தம் அடைவார்கள்

அடுப்பு நட்சத்திரமான பரணியில் கோபம் அடைந்த ராஜ கிரகமான சூரியன் அடுத்து உடைவாளை குறிக்கும் கிருத்திகை நட்சத்திரத்தில் சென்று தனது பகையை முடித்து கொள்கிறது.

கிருத்திகை தலையில்லா நட்சத்திரம் ஆகும்.

பிருகு நந்தி நாடி ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா
7200044010

பிரபஞ்ச ரகசியம்



பிரபஞ்சத்தில் ஓர் பயணம்

108 முறைகள் மந்திரம் சொல்வது ஏன்

ராசி மண்டலத்தில் 108 நட்சத்திர பாதங்கள் உள்ளன

108/1008/100008 முறைகள் மந்திரம் சொல்வது ஏன்
நமது சூரிய குடும்பம் சூரியனில் ஆரம்பித்து சனிக்கிரகம் வரை வியாபித்திருக்கின்றது
என்களில் 1 சூரியனை குறிக்கும்
8 சனிக்கிரகத்தினை குறிக்கும்
பூஜ்ஜியம் பிரபஞ்சத்தை குறிக்கும் அல்லது நமது சூரிய குடும்பத்தின் சுற்று வட்ட பாதையை குறிக்கும்.

இவ்வாறு சொல்வதால் நமது சொல்லும் மந்திரங்களின் அலை வரிசை ஆனது சூரிய குடும்பத்தின் நீள் வட்ட பாதைகளில் பரவி ஒரு செயற்கைகோள் போல செல்கின்றது

உங்களின் மந்திர அலைகளின் மூலம் தான் நீங்கள் சூட்சுமமாக பயணிக்க முடியும். இவைதான் உங்கள் வாகனம் போன்று செயல்படும்

இந்த அலைவரிசை சூரிய குடும்பத்தை விட்டு வெளியே சென்றால்தான் நீங்கள் பிரபஞ்சத்துடன் கலக்க இயலும்

சூரிய குடும்பம் வரை பயணிக்கும் போதே உங்களுக்கு எண்ணற்ற தகவல்கள் உங்களின் மூளையில் தோன்றும்

அலை வரிசை சூரிய குடும்பத்தை விட்டு வெளியே செல்ல பலமான ஓர் சக்தி தேவைப்படுகின்றது

இப்போது நீங்களும் படு உக்கிரமாக மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

சூரிய குடும்பத்தின் சுற்றுவட்ட பாதையினை கடந்த பிறகு பல இரகசியங்கள் உங்களுக்கு மட்டும் புலப்பட துவங்கும்.

நீங்கள் சக்தியின் பிறப்பிடமாக மாரியிருப்பீர்கள்.

நவகிரகங்கள் உங்களை கட்டுப்படுத்த இயலாது. ஏனெனில் உங்கள் அலைவரிசை என்னும் வாகனம் இந்த சூரிய குடும்பத்தினை விட்டு வெளியே சென்றுவிட்டது.

நீங்கள் நவகிரகங்களை கட்டுப்படுத்த ஆரம்பிப்பீர்கள்

பஞ்சபூதமும் வசியமாகும்

அட்டமா சித்திகளும் வசமாகும்

இன்னும் சுழலும்

ஆச்சார்யா
7200044010

ஆன்மீக ஜோதிட வகுப்புகள்



மொத்தம் ஒன்பது விதமான விசயங்கள்

1) ஆத்ம சாதனம் ஜோதிட ரீதியாக எப்போது செய்யலாம்

2) உடலில் சக்திகளை பெருக்கி கொள்ளும் வழிமுறைகள்

3) ஆலய வழிபாட்டில் உள்ள சூட்சும ஆன்மீக ரகசியங்கள்

4) பஞ்ச பூத வழிபாட்டு முறைகள்

5) பிரபஞ்ச ஆற்றலை பெறும் முறைகள்

6) பிரபஞ்ச ஆற்றலை பிரயோகம் செய்யும் முறைகள்

7) பிரபஞ்ச ஆற்றல் மூலம் பணம் வசீகரிக்கும் முறைகள் - செய்முறை பயிற்சி

8) தொலைவில் இருக்கும் நபரின் நோயை குணப்படுத்தும் முறைகள்

9) இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் இறப்பை சில தினங்கள் தள்ளிப்போடும் உன்னத முறைகள்

இன்னும் பலவித விசயங்களோடு
ஆன்மீக ஜோதிட வகுப்புகள் என்ற புது தலைப்பில் வகுப்புகள் நடைபெறும்
(நேரடி வகுப்பு & ஆன்லைன் வகுப்பு)

கட்டணம் ரூ 2000/- மட்டும்

நான்கு நாட்கள் / ஒரு மாதம்

ஞாயிறு மாலை 4 to 7pm ஞாயிறு மட்டும்

14/05/2017 முதல்

முயற்சியும் ஆர்வமும் உள்ள நண்பர்கள்
தொடர்பு கொள்ளுங்கள்

ஆச்சார்யா
7200044010

கடிகரமும் கிரகங்களும்



கடிகாரம் மெதுவாக சுற்றினால் வக்கிர கதி
சனி கிரகத்தின் ஆளுமை
எல்லாமே பின்னோக்கி நடக்கும்.
கிடைத்ததெல்லாம் பறிபோகும்
காரியம் பெருத்த இழுபறிக்கு பின்னர் நடக்கும்
குழந்தை பிறப்பு, திருமணம், பரோமஷன் தாமதமாகும்

கடிகாரம் நின்றுவிட்டால் ஸ்தம்பன கதி
செவ்வாயின் ஆதிக்கம்
எந்த நிகழ்ச்சியும் சரியாக நடைபெறாது
கடன் நோய் அதிகரிக்கும்
குடும்பத்தில் சண்டை சச்சரவு அதிகமாகும்

கடிகாரம் வேகமாக சுற்றினால்
சந்திரனிற் ஆதிக்கம்
பெண்களின் ராஜ்ஜியம்
மாமியார் மருமகள் பிரச்சினை
வீட்டிற்கு சாப்பிட யாராவது தொடர்ந்து வந்து கொண்டிருப்பார்கள்
ஆண்கள் டம்மியாக இருப்பார்
எந்த ஒரு தீர்க்கமான முடிவும் எடுக்க இயலாது.

எனவே எதுவும் அதன் அதன் இயக்க வேகத்திலே சுற்றினால்தான் நல்லது

ஆச்சார்யா * @ 7200044010

09/05/2017 ராசிபலன்

09/05/2017 ராசிபலன்
ஹேவிளம்பி வருடம்
சித்திரை மாதம்
வளர்பிறை சதுர்தசி திதி
நட்சத்திரம் மதியம் 12:10 வரை சித்திரை, பிறகு சுவாதி


மேஷம்
அன்பு, கருணை, கல்வி,வியாபாரம், வாடிக்கையாளர் சந்திப்பு, வெற்றி, லாபம்

ரிஷபம்
வேலை, கடன், நோய் பதவி, புகழ்

மிதுனம்
ஆலய வழிபாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு, பயணம், மேற்கல்வி

கடகம்
கல்வி, வரவு, பாசம், உறவினர்கள் ஆதரவு, விமர்சனங்களுக்கு உள்ளாகுதல்

சிம்மம்
பயணம், எழுத்து, வியாபாரம், வாடிக்கையாளர் சந்திப்பு, துணையுடன் அன்யோன்யம்

கன்னி
வரவு, சுகபோஜனம், கடன், நோய், எதிர்ப்பு

துலாம்
நற்சிந்தனை, வழிபாடு, தியானம், கேளிக்கை, பொழுது போக்க

விருச்சிகம்
வரவும் செலவும் கலந்த நாள், கல்வி, சுகம், உறவினர்கள் ஆதரவு,

தனுசு
பயணம், எழுத்து, தகவல் தொடர்பு, வெற்றி, லாபம்

மகரம்
வரவு, சுகபோஜனம், அரட்டை, பதவி, புகழ், காரிய சித்தி

கும்பம்
நற்சிந்தனை, பயணம், இறை வழிபாடு, மேல் கல்வி

மீனம்
சந்திராஷ்டம தினம், கவனம் தேவை

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்