Saturday 26 August 2017

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை

குரு பெயர்ச்சி பலன்கள் 3
(பொது பலன்கள்)

இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பகுதியை படிக்கவும். இல்லை எனில் புரியாது.
-------------------------------------------------------------------
துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் சனி இருக்கப் பிறந்தவர்களுக்கு

இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். சக பணியார்கள் உதவுவார்கள். அண்ணன், பெரியப்பா போன்றவர்களுடன் உறவு மேன்படும். உங்கள் நலம்விரும்பிகள் வேலையில் உதவுவார்கள். வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு
சொல்லிகொடுத்த குருவை சந்தித்து ஆசி பெறுவது நன்மை பயக்கும்.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் குரு இருக்கப் பிறந்தவர்களுக்கு

உடலில் ஜீவ சக்தி அதிகரிக்கும். நலம்விரும்பிகள் உதவுவார்கள்.
மதிப்பு மரியாதை உயரும். உடல் உபாதைகள் நீங்கி உற்சாகம் கூடும்.
உங்கள் குருவிடம் ஆசிகள் பெறுவது, யானையிடம் ஆசி பெறுவது நன்மையை தரும். செல்வம் உண்டாகும்.
-------------------------------------------------------------------
துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் ராகு இருக்கப் பிறந்தவர்களுக்கு

வெளி நாடு அல்லது வெளிமாநிலம் செல்ல வாய்ப்புகள் வரும்.  அந்நியர்கள் உதவுவார்கள். சிலர் அந்நிய பாஷைகள் கற்று கொள்வீர்கள். உடல் உபாதைகள், நோய்கள் வரலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு.
-------------------------------------------------------------------
துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் கேது இருக்கப் பிறந்தவர்களுக்கு

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். துறவு மனப்பான்மை மேலோங்கும்
மன விரக்தி உண்டாகும். சிலர் யோகா, தியானம் கற்கலாம்.
அந்நியர்கள் உதவுவார்கள். சிலர் மாற்று மருத்துவம் படிப்பார்கள்.
சித்தர்கள் முனிவர்கள் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட நன்மை உண்டாகும்

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்