Tuesday 25 April 2017

கதை சொல்லும் உண்மை

கனி வாங்கிய பிள்ளையார்

புராண காலத்தில் ஒரு முறை நாரதர் கயிலாயத்திற்கு ஞானப்பழம் ஒன்றை கொண்டு வந்தார். அதனை பங்கிட்டு சாப்பிடக்கூடாது, யாராவது ஒருவர் அதை முழுமையாக சாப்பிட்டால்தான் அந்த கனிக்குரிய பலன் கிடைக்கும் என்றார் நாரதர். அவரது இந்த கலகத்தால் பழத்தை யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. விநாயகரும், முருகப்பெருமானும் அந்த பழத்தைப் பெறுவதற்காக போட்டி போட்டனர்.

‘உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே அந்த ஞானப் பழம்’ என்று சிவபெருமானும், பார்வதியும் அறிவித்தனர்.

முருகப்பெருமானோ, ‘இதோ! ஒரு நொடியில் உலகத்தைச் சுற்றி வருகிறேன்’ என்று கூறிவிட்டு தன் வாகனமான மயிலில் ஏறி உலகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டுச் சென்றார்.

விநாயகப்பெருமான், ஞானத்தை வடிவமாகக் கொண்டவர் என்பதால் அவரது சிந்தனை வேறு விதமாக இருந்தது. அவர் நாரதரிடம் சென்று, ‘நாரதரே! உலகம் என்றால் என்ன?, அம்மையப்பன் என்றால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நாரதர், ‘உலகம் தான் அம்மையப்பன், அம்மையப்பன் தான் உலகம்’ என்று பதிலளித்தார்.

இதையடுத்து சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வலம் வந்த விநாயகர், தானே அந்த ஞானப்பழத்தை பெற்றுக் கொண்டார். தாய், தந்தையே உலகம் என்பதை வலியுறுத்துவதாக இந்த புராணக்கதை அமைந் திருக்கிறது.


அம்மா என்றால் சந்திரன்
அப்பா என்றால் சூரியன்

சந்திரனின் கடக ராசி மோட்சத்தை குறிக்கும்

சூரியனின் சிம்மராசி அறத்தை, தர்மத்தை குறிக்கும்

எவன் ஒருவன் அறத்தையும் தர்மத்தையும் கடைபிடித்து மோட்சம் வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்கே ஞானம் கிட்டும்
ஒவ்வொரு மனிதனும் ஏன் ஜோதிடம் பயில வேண்டும்


ஜோதிடம் ஓர் சிறப்புபார்வை

ஜோதிடம் வேதத்தில் ஓர் அங்கம். இது ஏதோ சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் நடந்த, நடக்கும், நடக்க போகின்ற வாழ்க்கை பலன்களை மட்டுமே சொல்லகூடிய கலை இல்லை

1-5-9 தர்ம சாஸ்திரம்

தர்மங்களையும் அறங்களையும் சொல்லித்தருகின்றது. சிருஷ்டியை பற்றி சொல்கின்றது. வழிபாட்டு விசயங்கள் பற்றி அறியச் செய்கின்றது. அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. தன் முன்னோர்களை பற்றி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒரு மனிதன் அறிய வேண்டும் என்றும் தனக்கு பிறகு தன்னுடைய சந்ததிகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்று விரிவாக எடுத்துரைக்கின்றது

2-6-10 அர்த்த சாஸ்திரம்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. ஓரு மனிதன் எப்படி பொருளீட்ட வேண்டும். அவனுக்கு என்ன மாதிரி எதிர்ப்புகள் வரும்.
தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கேற்ப அவன் சமூகத்தில் அடையும் புகழ் முதலான விசயங்களை பற்றி கூறுகின்றது

3-7-11 காம சாஸ்திரம்
காமம் ஒரு மனிதன் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மற்றும் வாழ்வில் வெற்றி பெற தேவையான ரகசியங்கள் பற்றி கூறுகின்றது

4-8-12 மோட்ச சாஸ்திரம்
மோட்சமே மனிதனின் அகவாழ்விற்கான திறவுகோல்.
ஒவ்வொரு மனிதனும் எப்படி வீடு பேறு அடைவது பற்றி எடுத்துரைக்கிறது. தனி மனிதன் செய்யும் தவறுகளால் சமூகம் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறது, சமூகத்தால் தனி மனிதன் அடையும் பாதிப்புகளையும் பற்றி எடுத்து உரைக்கின்றது. அவனது ஆயுளுக்குள் அவன் செய்ய வேண்டியவற்றை உரைக்கின்றது.

ஜோதிடம் ஓர் மருத்துவ இயல்
மனிதர்களின் உடற்கூறு தத்துவத்தை அழகாக விளக்குகின்றது. எனவே நன்கு தேர்ச்சி அடைந்த ஜோதிடன் மருத்துவனுக்கு ஒப்பாவான்

ஜோதிடம் ஓர் மனோதத்துவ இயல்
மனிதர்களின் குணாதிசயங்கள், அவர்களின் பலம் பலவீனம் என்ன,
என்று விளக்கமாக கூறுகின்றது

ஜோதிடம் ஓர் வானவியல்
வானில் கிழக்கே எந்த பாகம் உதயமாகிறது, மேற்கில் எந்த பாகம் மறைகிறது, உச்சியில் தெரியும் பாகம் என்ன? கண்ணுக்கு தெரிமாமல் மறைந்துள்ள பாகம் என்ன, எப்போது மழை பொழியும், பருவநிலை மாற்றம் என பல தகவல்களை தருகின்றது.

ஜோதிடம் ஓர் சமூக அறிவியல்
ஒரு அரசு எப்படி ஆட்சி நடக்க வேண்டும், எப்போது போர் தொடுக்க வேண்டும், புவியியல் சார்ந்த விசயங்களை கூறுகின்றது.
முன்னோர்களின் வரலாற்றை கூறுகின்றது. வரலாறு, குடிமையியல், பூகோளம் பற்றி கூறுகின்றது.

ஜோதிடம் ஓர் ஆன்மீக இயல்
ஜோதிடம் ஓர் இசைஇயல்
ஜோதிடம் ஓர் மந்திரவியல்

ஜோதிடமே வேதம் வேதமே ஜோதிடம்

ஜோதிடம் அறிந்தவன் முக்காலம் உணர்ந்த முனிவன் ஆகின்றான். சகலமும் தெரிந்த ஞானியாகின்றான்

ஒரு மனிதன், அரசு, சமுதாயம், பூகோளம் எப்படி இயங்க வேண்டும், எப்போது இயங்க வேண்டும் என்று கூறுகின்றது.

ஜோதிடம் கற்றுக்கொள்வதால் பெருமிதம் கொள்ளுங்கள். Proud to be an Astrology Student.

ஜோதிடம் கற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும்
ஆச்சார்யா செந்தில்குமார்
பாலகிருஷ்ணாபுரம் 6வது தெரு
ஆதம்பாக்கம், சென்னை 88
7200044010

26/04/2017 தினப்பலன்

26/04/2017 தினப்பலன்
ஹேவிளம்பி வருடம்  
சித்திரை 13, புதன் கிழமை,
அஸ்வினி நட்சத்திரம்
அமாவாசை திதி


மேசம்
மகிழ்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி
பொழுதுபோக்கு, குழந்தைகளால் மகிழ்ச்சி

ரிசபம்
தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை, நிலம், வீடு, வாகனம் வாங்க முயற்சி செய்ய ஏற்ற நாள்

மிதுனம்
பயணம், சகோதரர்களால் நன்மை, வரவு, பதவி, புகழ்

கடகம்
தன வரவு, தானியங்கள் சேர்க்கை, ஆலய தரிசனம், பயணம்

சிம்மம்
புதிய சிந்தனை, கௌரவம், மகிழ்ச்சி

கன்னி
சந்திராஷ்டம தினம், கவனம் தேவை

துலாம்
வெற்றி, லாபம் மூத்த சகோதரர்கள் ஆதரவு, நண்பர்களால்.நன்மை

விருச்சிகம்
பதவி, புகழ், வரவு, கார்ய் சித்தி

தனுசு
ஆலய வழிபாடு செய்வீர்கள், தொலை தூர பயணத்திற்கு திட்டமிடுவீர்கள், அதிர்ஷ்டம் உண்டாகும்

மகரம்
விமர்சனங்களுக்கு உள்ளாகுதல்
உடல் வலி, அசதி உண்டாகும்

கும்பம்
கூட்டு முயற்சிகளில் வெற்றி
லாபம், துணையுடன் அன்யோன்யம், கூட்டு முயற்சிகளில் வெற்றி

மீனம்
போட்டி, பொறாமை, வரவு, சிலருக்கு நோய்கள் ஏற்படும்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்