Sunday 23 April 2017

நவகிரகங்கள் ஏன் சிவன் கோயில்களில் மட்டும் அமைந்திருக்கின்றன


நவகிரக சன்னதிகள் ஏன் சிவன் கோவிலில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை யோசித்து பல புத்தகங்களை புரட்டியும் பல இணைய தளங்களை தேடிய போது அதன் பதிலில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் ஒரு சிவலிங்கம் படத்தினை இணையத்தில் இருந்து இறக்கி நீண்ட நேரம் யோசித்த போது சில விசயங்கள் பிடிபட்டது

அதனை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்

வானத்தில் கிரகங்கள் எல்லாம் ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றிவருகின்றன

வட்டம் அல்ல, நீள்வட்டம் அதாவது Oval shape

இப்போது அப்படியே லிங்கத்தினை பாருங்கள். அதுதான் சூரிய குடும்பத்தின் சுற்றுவட்டப்பாதை ஆகும். இதைதான் நாம் வழிபடுகின்றோம். என்ன எனது பதிலில் நம்பிக்கை இல்லையா. இப்போது நான் பதிந்திருக்கும் படத்தினை பாருங்கள்.

நந்தியினை ஒரு மனிதானக பாருங்கள்.

ஆவுடையார் பால்வீதி ஆகும்.
ஆவுடையாரில் லிங்கம் பால்வீதியில் உள்ள சூரிய குடும்பம் ஆகும்

ஆவுடையாரின் நீண்ட பகுதியை டெலஸ்கோப் ஆக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.

லிங்கத்தை சூரிய குடும்பத்தின் நீள்வட்டபாதையாக கண்டுகொள்ளுங்கள்.

ஒரு மனிதன் ஒரு நீண்ட குழாய் வழியாக வானில் தோன்றும் கிரக சஞ்சாரங்களை கண்டறியும் விஞ்ஞானம் சிவலிங்க ரூபத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி பாரத்தால் தெரியும் ரூபமே நவகிரகங்கள்

எனவேதான் சிவன் கோவில்களில் மட்டும் நவகிரகங்கள் அமைந்துள்ளன.

நாடி ஜோதிடர் & பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
சென்னை
7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்