Tuesday 25 April 2017

ஒவ்வொரு மனிதனும் ஏன் ஜோதிடம் பயில வேண்டும்


ஜோதிடம் ஓர் சிறப்புபார்வை

ஜோதிடம் வேதத்தில் ஓர் அங்கம். இது ஏதோ சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் நடந்த, நடக்கும், நடக்க போகின்ற வாழ்க்கை பலன்களை மட்டுமே சொல்லகூடிய கலை இல்லை

1-5-9 தர்ம சாஸ்திரம்

தர்மங்களையும் அறங்களையும் சொல்லித்தருகின்றது. சிருஷ்டியை பற்றி சொல்கின்றது. வழிபாட்டு விசயங்கள் பற்றி அறியச் செய்கின்றது. அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. தன் முன்னோர்களை பற்றி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒரு மனிதன் அறிய வேண்டும் என்றும் தனக்கு பிறகு தன்னுடைய சந்ததிகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்று விரிவாக எடுத்துரைக்கின்றது

2-6-10 அர்த்த சாஸ்திரம்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. ஓரு மனிதன் எப்படி பொருளீட்ட வேண்டும். அவனுக்கு என்ன மாதிரி எதிர்ப்புகள் வரும்.
தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கேற்ப அவன் சமூகத்தில் அடையும் புகழ் முதலான விசயங்களை பற்றி கூறுகின்றது

3-7-11 காம சாஸ்திரம்
காமம் ஒரு மனிதன் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மற்றும் வாழ்வில் வெற்றி பெற தேவையான ரகசியங்கள் பற்றி கூறுகின்றது

4-8-12 மோட்ச சாஸ்திரம்
மோட்சமே மனிதனின் அகவாழ்விற்கான திறவுகோல்.
ஒவ்வொரு மனிதனும் எப்படி வீடு பேறு அடைவது பற்றி எடுத்துரைக்கிறது. தனி மனிதன் செய்யும் தவறுகளால் சமூகம் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறது, சமூகத்தால் தனி மனிதன் அடையும் பாதிப்புகளையும் பற்றி எடுத்து உரைக்கின்றது. அவனது ஆயுளுக்குள் அவன் செய்ய வேண்டியவற்றை உரைக்கின்றது.

ஜோதிடம் ஓர் மருத்துவ இயல்
மனிதர்களின் உடற்கூறு தத்துவத்தை அழகாக விளக்குகின்றது. எனவே நன்கு தேர்ச்சி அடைந்த ஜோதிடன் மருத்துவனுக்கு ஒப்பாவான்

ஜோதிடம் ஓர் மனோதத்துவ இயல்
மனிதர்களின் குணாதிசயங்கள், அவர்களின் பலம் பலவீனம் என்ன,
என்று விளக்கமாக கூறுகின்றது

ஜோதிடம் ஓர் வானவியல்
வானில் கிழக்கே எந்த பாகம் உதயமாகிறது, மேற்கில் எந்த பாகம் மறைகிறது, உச்சியில் தெரியும் பாகம் என்ன? கண்ணுக்கு தெரிமாமல் மறைந்துள்ள பாகம் என்ன, எப்போது மழை பொழியும், பருவநிலை மாற்றம் என பல தகவல்களை தருகின்றது.

ஜோதிடம் ஓர் சமூக அறிவியல்
ஒரு அரசு எப்படி ஆட்சி நடக்க வேண்டும், எப்போது போர் தொடுக்க வேண்டும், புவியியல் சார்ந்த விசயங்களை கூறுகின்றது.
முன்னோர்களின் வரலாற்றை கூறுகின்றது. வரலாறு, குடிமையியல், பூகோளம் பற்றி கூறுகின்றது.

ஜோதிடம் ஓர் ஆன்மீக இயல்
ஜோதிடம் ஓர் இசைஇயல்
ஜோதிடம் ஓர் மந்திரவியல்

ஜோதிடமே வேதம் வேதமே ஜோதிடம்

ஜோதிடம் அறிந்தவன் முக்காலம் உணர்ந்த முனிவன் ஆகின்றான். சகலமும் தெரிந்த ஞானியாகின்றான்

ஒரு மனிதன், அரசு, சமுதாயம், பூகோளம் எப்படி இயங்க வேண்டும், எப்போது இயங்க வேண்டும் என்று கூறுகின்றது.

ஜோதிடம் கற்றுக்கொள்வதால் பெருமிதம் கொள்ளுங்கள். Proud to be an Astrology Student.

ஜோதிடம் கற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும்
ஆச்சார்யா செந்தில்குமார்
பாலகிருஷ்ணாபுரம் 6வது தெரு
ஆதம்பாக்கம், சென்னை 88
7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்