Monday 24 April 2017

அடிப்படை ஜோதிட பாடங்கள்

கிரக காரகங்கள் - புதன்
--------------------------

கிரக காரகங்கள் அனைத்தும் ஒரு கிரகத்தின் உருவம், நிறம், சுழற்சி வேகம், வானத்தில் அது நிற்கும் இடம் இவைகளை பூமியில் உள்ள விசயங்களோடு ஒப்பிட்டுக்கூறப்பட்டுள்ளது. இதனால்தான் ஜோதிடம் ஒரு ஒப்பீட்டியல் எனக்கூறப்படுகிறது. ஒரு உதாரணத்திற்காக புதனின் காரகங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
நவக்கிரகங்களில் புதனின் காரகங்கள்
1.கிரகங்களில் உருவத்தில் மிக சிறிய கிரகம் புதன் என்பதால் சிறுவன், இளைஞன், இளவரசன் என அழைக்கப்படுகிறான்.
2.சூரிய ஒளி முதலில் புதன் மீது விழுகிறது, மனித உடலில் சூரிய ஒளி தோல் மீது விழுகிறது, இதனால் புதன் தோலுக்கு(சருமம்) காரகனாக கருதப்படுகிறான்.
3.புதன் எப்பொழுதும் சூரியனுடன் இணைந்தே சஞ்சரிக்கிறான், இதனால் புதனுக்கு நட்பு காரகன் என்று பெயர்.
4.அதிகப்பட்ச சூரிய ஒளி புதனுக்கே கிடைக்கிறது. ஓளியானது அறிவிக்கு ஒப்பானது. இதனால் புதன் அறிவுக்காரகன் என அழைக்கப்படுகிறான். அறிவு, கல்வி சம்பந்தமான அனைத்து காரகங்களும் புதனை சாரும்.
5.சந்திரனுக்கு அடுத்த நிலையில் கிரங்களில் அதி வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதன் என்பதால் சுறுசுறுப்புக்கு புதன் காரகனாகிறான்.
6.சந்திரனைப்போன்று புதனுக்கும், வளர்பிறை, தேய்பிறை தோற்றம் இருப்பதால் புதன் ஒரு பெண் கிரகமாக பாவிக்கப்படிகிறது.
7.புதன் பச்சை நிறத்தில் இருப்பதால், பச்சை நிறம், பச்சை நிறமுள்ள மரகதக்கல், பசுமையான இடங்கள், இவைகளுக்கு புதன் காரகனாக சொல்லப்பட்டுள்ளது.
8.அடிக்கடி வக்கிரமடையும் கிரகம் புதனாகும், நாக்கில் பிறக்கும் வாக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரி இல்லாமல் அடிக்கடி முன்னுக்குப்பின் முரண்படுவதால், நாக்கு, வாக்கு இவைகளுக்கு காரகன் புதனாகும்.
9.மனித உடலில் அதிக அளவில் சூரிய ஒளியை பெறும் உறுப்பு தோல் என்றாலும், குறிப்பாக அதிக சூரிய ஒளி பெறும் உறுப்பு நெற்றியாகும். எனவே நெற்றிப்பகுதியை குறிக்கும் கிரகம் புதனாகும்.
10.சூரியனுடன் எப்பொழுதும் இணைந்தே இருக்கும் கிரகம் புதன் என்பதால் உடல் உறுப்புகளில் எல்லா உறுப்புகளோடும் இணையும் வலிமை பெற்ற உறுப்பு கைகள் மட்டுமே. எனவே கைகளைக்குறிக்கும் கிரகம் புதனாகும்.
11.சூரியனின் அதிதேவதை சிவனாகும், சிவனுடன் இணைந்து பிரிக்கமுடியாமல் இருக்கும் தேவதை விஷ்ணுவாகும். சிவனும்,விஷ்ணுவும் இணைந்த அம்சம் சங்கர நாராயண அம்சம் என்ப்படும். எனவே சூரியனுடன் இணைந்தே இருக்கும் புதனுக்கு அதிதேவதை விஷ்னுவாகும்.
12.பச்சை நிறத்தில் உள்ள பறவையாகவும், பேசும் திறமையுள்ள பறவையாகவும் இருக்கும் கிளி புதனுக்குரிய பறவையாகும்.
13.சூரியனுடன் எப்பொழுதும் இணைந்தே இருக்கும் கிரகம் புதன் என்பதால் மனிதர்கள் கூடும் பொது இடங்கள் அனைத்தும் புதனுக்குரியதாகும். வீட்டில் எல்லோரும் கூடியிருக்கும் வரவேற்பறை, ஊரில் பொதுமக்கள் கூடும் மைதானம், விளையாட்டு மைதானம், நாடக, நாட்டிய கொட்டகைகள், திரையரங்குகள், திருமண மண்டபம், பள்ளிகள், கல்லூரிகள், வியாபார சந்தைகள், வணிக வளாகங்கள் இவை புதனுக்குரிய இடங்களாகும்.
14. புதன் மீது சூரிய ஒளி முதலில் விழுவது போல் ஒரு கட்டிடத்தின் மீது சூரிய ஒளி படும்பொழுது, மொட்டை மாடி மீதே சூரிய ஒளி நேரடியாக விழுகிறது எனவே மொட்டை மாடியைக்குறிப்பது புதனாகும்.
15. புதன் மீது சூரிய ஒளி முதலில் விழுவது போல்,தலையில் முடிகுறைவாகி மொட்டையாகியிருப்பவர்களுக்கு மொட்டை மீதுதான் சூரிய ஒளி முதலில் விழும் எனவே மொட்டைத்தலை, வழுக்கைத்தலை இவைகளைக்குறிப்பது புதனாகும்.

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்