Thursday 11 May 2017

நாடி முறையில் பலன் காணுதல்

நாடி முறையில் பலன் நடக்கும் காலத்தை துல்லியமாக அறிவது எப்படி....

குரு வணக்கம்

நாடி முறையில் பலன்கள் உறுதியாக நடக்கும் என்று கணித்த பின் அந்த பலன் எப்போது நடக்கும் என்பதை பார்க்க வேண்டும் இதை உதாரண ஜாதகம் மூலம் அறியலாம்.

பிறப்பு ஜாதகத்தில் மகரத்தில் சுக்கிரன் உள்ள ஜாதகருக்கு எப்போது திருமணம் நடக்கும்

வருடம் அறியும் முறை

கோச்சாரத்தில் குரு அல்லது சனி பிறப்பு ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1,2,5,9 ராசிகளில் அடுத்து எப்போது வரும் என்பதை பார்க்க வேண்டும்

மாதம் அறியும் முறை

கோச்சாரத்தில் சூரியன் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1,2,5,9 ராசிகளில் அடுத்து எப்போது வரும் என்பதை பார்க்க வேண்டும்

நாள் அறியும் முறை

கோச்சாரத்தில் சந்திரன் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1,2,5,9 ராசிகளில் அடுத்து எப்போது வரும் என்பதை பார்க்க வேண்டும்

அதாவது பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் மகரத்தில் அமர்ந்த ஜாதகருக்கு,
கோச்சாரத்தில் குரு அல்லது சனி & சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் மகரம், கும்பம், ரிசபம், கன்னி இந்த ராசியில் ஏதாவது ஒரு ராசியில் இருக்கும் போது திருமணம் நடைபெறும்.

இதே போல வீடு கட்டுதல், கார் வாங்குதல் முதலிய நிகழ்வுகளையும் எளிதாக அறியலாம்

Acarya Senthilkumar
7200044010
Adambakkam, Chennai.

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்