Saturday 26 August 2017

குரு பெயர்ச்சி பலன்கள் 2

குருவே சரணம் குருவே துணை

குரு பெயர்ச்சி பலன்கள் 2
(பொது பலன்கள்)


காலப்புருஷ லக்னமான மேஷத்திற்கு 9 மற்றும் 12 ஆம் வீட்டிற்குரியவர் குரு.

நாடி ஜோதிடத்தில் ஆண் ஜாதகத்தில் ஜாதகரை குறிப்பவர் குரு.
பெண் ஜாதகத்தில் ஜாதகியை குறிப்பவர் சுக்கிரன்.

ஐப்பசி, மாசி, ஆனி மாதம்  1,5,9
மார்கழி, சித்திரை, ஆவணி மாதம் 3,7,11
புரட்டாசி, கார்த்திகை மாதம் 2,12
மேற்சொன்ன மாதங்களில் பிறந்தவர்கள்

புகழ் உண்டாகும். தந்தை மகன் இடையே இருந்த கறுத்து வேறுபாடுகள் நீங்கி உறவு மேலோங்கும். பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கண்டிப்பாக பதவி உயர்வு உண்டு. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறப்பு உண்டாகும். நிர்வாகத்திறன் கூடும். தந்தை அல்லது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவி செய்வார்கள். நோய்கள் குணமாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்களுக்கு

அலைச்சல், பயணங்கள் உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். போஷாக்கு உணவுகள் கிடைக்கும். தாய் மகன் உறவு நன்றாக இருக்கும். தீர்த்த யாத்திரைகள் உண்டாகும். தானிய சேர்க்கை உண்டு.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் சுக்கிரன் இருக்க பிறந்தவர்களுக்கு

தன வரவு நன்றாக இருக்கும். விலை உயர்ந்த புத்தாடைகள் வாங்குவீர்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.  சொகுசுப் பொருட்கள் சேர்க்கை உண்டு.
திருமணமாகாத ஆண்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் செவ்வாய் இருக்க பிறந்தவர்களுக்கு

உடல் வலுப்பெறும். கோபம் அதிகமாகும். கடன் வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும். ஒரு சிலருக்கு இருதய பாதிப்பு வரலாம். வீரியம் அதிகமாகும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்.
சிறிய அளவில் அடிபடலாம். திருமணமாகத இளம்பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும்

-------------------------------------------------------------------

துலாம், கும்பம், மிதுனம் ராசிகள் - 1,5,9
தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் - 3,7,11
கன்னி, விருச்சிகம் 2-12
மேற்சொன்ன ராசிகளில் புதன் இருக்க பிறந்தவர்களுக்கு

புதிதாக ஏதேனும் படிக்க துவங்குவீர்கள். நண்பர்கள் வட்டம் அதிகரிக்கும். இளம் வயதினருக்கு காதல் மலரும். உடலில் இளமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புத்தகங்கள் வாங்குவீர்கள்.

₹₹₹₹₹₹₹₹₹ தொடரும். ₹₹₹₹₹₹₹₹₹₹₹

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலிமை மற்றும்
கோட்சார குருவின் பார்வைகளின் வலுவிற்கேற்ப பலன்களின் அளவுகள் மாறலாம். ஆனால் மேற்சொன்ன பலன்கள் நடைபெறும்.

ராகு கேதுக்கள் இவற்றில் சேர்ந்தால் பலன்கள் நடைபெறுவதில தடைகள் உண்டாகும்

ஆச்சார்யா @ 7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்