Saturday, 29 April 2017

30/04/2017 ராசிபலன்

30/04/2017 ராசிபலன்
ஹேவிளம்பி வருடம் சித்திரை 17
வளர்பிறை பஞ்சமி திதி
மிருகசிரீஷம் நட்சத்திரம் 8:21Am வரை பிறகு திருவாதிரை நட்சத்திரம்


மேஷம்  Aries
லாபம், வெற்றி, நண்பர்களால் நன்மை, மூத்த சகோதரர்கள் ஆதரவு
Victorious and Gain

ரிஷபம் Tarus
பதவி, புகழ், கார்யசித்தி, வரவு
Prestigious and Income


மிதுனம் Gemini
அதிர்ஷ்டம், ஆலய வழிபாடு, பயணம்
Luck and Spiritual

கடகம் Cancer
விமர்சனம், அலைச்சல், வரவு, இழப்பு
 Reviews and Drift


சிம்மம் Leo
கூட்டு முயற்சி, துணையுடன் அன்யோன்யம், சமூக தொடர்பு
Partnership, Romance


கன்னி Virgo
போட்டி, கடன், எதிர்ப்பு, நோய்
Compete,Dept,Disease


துலாம் Libra
மகிழ்ச்சி, ஆரோக்யம், நன்மை,  பொழுதுபோக்கு
Happiness and Bliss

விருச்சிகம்
சந்திராஷ்டம தினம், கவனம் தேவை,  கல்வி, தாயன்பு
Education and get blessing from mother, Chandrashtama day

தனுசு Sagittarius
முயற்சி, பயணம், எழுத்து, தகவல் தொடர்பு, சகோதர ஆதரவு
Travel, communication


மகரம் Capricon
தன வரவு, சுக போஜனம், பேச்சு, தானியங்கள் சேர்க்கை
Income,Feast

கும்பம் Aquarius
நற்சிந்தனை, ஆரோக்யம், புகழ்
Good thoughts and Popularity


மீனம் Pisces
வரவும் செலவும் கலந்த நாள், ஓய்வு
Income and Expense

Friday, 28 April 2017

29/04/2017 ராசி பலன்

29/04/2017 ராசி பலன்
சனிக்கிழமை
ஹேவிளிம்பி வருடம்
சித்திரை 16ஆம் தேதி
நட்சத்திரம் ரோஹிணி காலை 10:55 வரை பிறகு மிருகசிரீஷம்
திதி வளர்பிறை திருதியை காலை 6:55 வரை பிறகு சதுர்த்தி

மேஷம்
தனவரவு, சுகம், நிலம், வீடு, வாகனம் மற்றும் வீட்டிற்கு தேவையான சொகுசுப் பொருட்கள் வாங்க அருமையான நாள், தனம் மற்றும் தான்யங்கள் சேர்க்கை
தாயிடம் ஆசி பெற இன்றைய தினம் இனிமையானதாக அமையும்
Income, Shopping and blissful  Day

ரிஷபம்
புது முயற்சி, புது பயணம், சகோதரர்கள் ஆதரவு, எழுத்து, தட்டச்சு செய்தல், புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகுதல், நிலம் வீடு வாகனம் விற்க ஏற்ற நாள்
A new day for Journey, Contracts and siblings support.

மிதுனம்
வரவும் செலவும் கலந்த நாள், சுக போஜனம், குழந்தைகளுக்கு அன்னம் அளிக்க உகந்த நாள், கடன்களை அடைப்பீர்கள்
A Day for income & expenses, Settle the Debts.

கடகம்
நற்சிந்தனை, கீர்த்தி, வெற்றி, லாபம், மூத்த சகோதரர்கள் ஆதரவு, நண்பர்களால் நன்மை
A Good Day for getting support from elder brothers and friends.

சிம்மம்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப தொழில் நிமித்தம் பயணம் உண்டு. தொழிலுக்காக முதலீடு செய்யும் தினம் இன்று.
செலவு, விரயம், மருத்துவ சிகிச்சை
A day for Investment , Expenses( Medical, Wastages).

கன்னி
தந்தை வழி உறவுகளால் லாபம் பயணங்களால் நன்மை, அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இறைவழிபாடு, தந்தையிடம் ஆசி பெறுதல் நன்மையை தரும்
A day to get Luck & Fortune

துலாம்
இழப்பு, துக்கம், சோகம் அலைச்சல் விமர்சனங்களுக்கு உள்ளாகுதல்
சந்திராஷ்டம தினம் தேவை கவனம்
A Day to be Careful.

விருச்சிகம்
துணையுடன் அன்யோன்யம்
கூட்டு முயற்சிகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். புது தொழில் துவங்குதல், தொலைதூர பயணம்
A Day for Luck  / Long Journey

தனுசு
கடன், நோய், விமர்சனங்களுக்கு உள்ளாகுதல், அலைச்சல், உடல் அசதி, எதிர்பாராத தனவரவு
A day to Be Careful & unexpected income.

மகரம்
காதல், துணையுடன் அன்யோன்யம்
குழந்தைகளால் மகிழ்ச்சி, புது தொழில் துவங்குதல், கூட்டு முயற்சிகளில் வெற்றி, சமூக தொடர்பு,  வாடிக்கையாளர் சந்திப்பு,
குல தெய்வ வழிபாடு நன்மை தரும்
Good Day for starting new business, social communication.

கும்பம்
தாய்மாமன் சந்திப்பு, நிலம், வீடு வாகனம் வாங்க கடன் கிடைக்கும்
சிலருக்கு நோய் உண்டாகும். கல்வி கடன்கள் கிடைக்கும்
Day to invest in vehicles and properties,

மீனம்
புது முயற்சி, குழந்தைகளால் மகிழ்ச்சி, எழுத்தாளர்கள் புதிய முறையை கையாள்வீர்கள், உடல் உழைப்பு இருக்காது, சிறு பயணம்
சகோதரர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
All is Well

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா
7200044010

Thursday, 27 April 2017

அட்சய திரிதியைக்கு நகை, உணவு பொருட்கள் வாங்க நல்ல நேரம்




அட்சய திரிதியைக்கு நகை வாங்க இருப்பவர்கள் பின்வரும் நேரங்களில் வாங்கலாம்

மதியம் 1-2 சுக்கிர ஹோரை
மதியம் 2-3 புதன் ஹோரை
இரவு 8-9 சுக்கிர ஹோரை
இரவு 9-10 புதன் ஹோரை
மாலை 5-6 குரு ஹோரை

உணவுப் பொருட்கள் வாங்க விருப்பமுள்ளவர்கள்

மதியம் 3-4 நல்ல நேரம் சந்திர ஹோரை

தியானம் செய்ய
மதியம்  3-4 சந்திர ஹோரை
மாலை 5-6 குரு ஹோரை
இரவு 7-8 சூர்ய ஹோரை

ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

28/04/2017 ராசிபலன்

28/04/2017 ராசிபலன்

ஹேவிளம்பி வருடம்
சித்திரை மாதம் 15 ஆம் தேதி
வளர்பிறை திருதியை திதி(துவிதியை காலை 10:31 வரை பிறகு திரிதியை)
கிருத்திகை நட்சத்திரம்
வெள்ளிக்கிழமை
     (அட்சய திரிதியை தினம்)

மேஷம்
கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு முதலீடு செய்வீர்கள். மனைவி வழியில் மருத்துவ செலவுகள் உண்டு. வரவும் செலவும் கலந்த நாள். தானியங்கள் நகைகள் வாங்க உகந்த நாள்.
Investment Day

ரிசபம்
எதிரிகளை பந்தாடுவீர்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி உண்டாகும். நண்பர்கள், மூத்த சகோதரிகள் ஆதரவு உண்டு.
All Success

மிதுனம்
குழந்தைகளால் மகழ்ச்சி, பதவி புகழ் உண்டு. மகிழ்ச்சிக்காக புகழுக்காக செலவு செய்வீர்கள்
Enjoy & Happiness

கடகம்
தாயின் ஆசி உண்டு. கல்வி, மேற்கல்வி கற்க திட்டமிடுவீர்கள். வெற்றி உண்டு. நண்பர்கள் ஆதரவு உண்டு..
All is Well

சிம்மம்
உங்களுடைய எழுத்துக்களால் அல்லது சகோதரர்களால் விமர்சனங்கள் உண்டு. விமர்சனங்களால் புகழடையும் தினம் இன்று. கவனம் தேவை. பயணங்களில் இடையூறு, அசதிகள் ஏற்படும்.ராசிநாதன் உச்சமாக இருப்பதால் புகழுக்கு களங்கம் வராது. தகவல் தொடர்புகளில் கவனம் தேவை
Be careful

கன்னி
அதிர்ஷ்டமான தினம் இன்று. தொட்டதெல்லாம் பொன்தான். தனவரவு உண்டு. பெண்களால் கவனிக்கப்படும் தினம் இன்று.
Luck & Fortune

துலாம்
சந்திராஷ்டம தினம். கவனம் தேவை.
Danger

விருச்சிகம்
மனைவி/மகள் வழியில் செலவு உண்டு. துணையுடன் அன்யோன்யம். மகிழ்ச்சி. குழந்தையின் பெயரில் சேமிக்கலாம்.
Happy mood with Partner

தனுசு
கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும்
வெற்றி, லாபம் உண்டு. சொகுசுப்பொருட்கள் சேர்க்கை உண்டு.
Debt & Success

மகரம்
மனைவிக்கு நகை வாங்கி தருவதால் புகழடைவீர்கள். சமூகத்தை பற்றி எழுதுவதால் புகழடையும் தினம். இளைய சகோதரர்களால் / பயணங்களால் நன்மை. மகிழ்ச்சி, புகழ், முயற்சி
Fame and popularity

கும்பம்
வரவு, சொகுசுப் பொருட்கள் சேர்க்கை, அதிர்ஷ்டம், பயணம், ஆலய தரிசனம்.
Shopping Day

மீனம்
எதிர்பாராத தனவரவு, முயற்சி, எழுத்து, விமர்சனங்கள், செவவு
50vs50 Good&Bad

ஜோதிட வகுப்பு

சென்னையில் ஜோதிட வகுப்புகள்

பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை 3 மாதம்

காலை 10 முதல் மாலை 2 வரை

மாத கட்டணம் 1100/- மட்டும்

ஆச்சார்யா
7200044010 (Whatsapp)

மேற்கொண்டு தகவல்கள் வேண்டும் நபர்கள்
வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

Wednesday, 26 April 2017

கிரக காரகங்கள்



குருவின் காரக விளக்கங்கள்
கிரகங்களில் உருவத்தில் மிகப்பெரியது குருவாகும். இந்த கிரகம் அதிவேகமும் இல்லாமல் மந்த வேகமும் இல்லாமல் மித வேகத்தில் நகர்ந்து செல்லும் கிரகமாகும். குருவின் நிறம் மஞ்சளாகும். குருவிலிருந்து வரும் மஞ்சள் நிறக்கதிர்களே சூரியனின் வெப்பத்தை குறைத்து பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு வழி வகை செய்கிறது. இதன் காரணத்தால் குருவை ஜோதிடத்தில் ஜீவக்காரகன் அல்லது உயிர்க்காரகன் என அழைக்கிறார்கள். முட்டையை உடைத்துப்பார்த்தால் அதன் உட்கரு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறம் குருவினுடையது. இதன் மூலம் உயிர்கள் தோன்றுவதில் குருவிற்கு இருக்கும் முக்கிய பங்கினை புரிந்துகொள்ளலாம்.
குருவானது உருவத்தில் பெரிய கிரகம் என்பதால் மனிதர்களில் முழுமையாக வளர்ச்சி பெற்ற மனிதர்களை குறிக்கிறது. அதாவது நடு வயதில் உள்ள மனிதர்களை குறிக்கிறது.
குரு உருவத்தில் பெரியதாக இருப்பதால் மற்ற கிரகங்களின் தாக்கம் குருவின் முன்னால் தோற்றுப்போய்விடுகின்றன. இதனால்தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுகிறார்கள். அதாவது சிறிய காந்த துண்டுகளை பெரிய காந்த துண்டுகள் கவர்ந்து இழுத்துக்கொள்ளும். கிரகங்கள் எல்லாம் பூமியைப்போல் காந்த துண்டுகளே.
உடல் பருமன் என்பது உடலில் அதிகம் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது. பெரிய உருவம் கொண்டது குரு , எனவே கொழுப்புக்கு அதிபதி குருவாகும். மேலும் கொழுப்பு சத்துள்ள நெய், வெண்ணெய் போன்ற பதார்த்தங்கள் குருவிற்கு உரியவையாகும்.
ஒரு மனிதனை உயிரோடு வைத்திருப்பது பிராண சக்தி என்னும் மூச்சுக்காற்றாகும்.உயிர்க்காரகம் பெற்ற குரு ,பிராண சக்தியை குறிக்கிறார். பிராண சக்தி மூக்கின் வழியே சுவாசிப்பதன் மூலம் கிடைக்கிறது. எனவே மூக்கை குறிக்கும் கிரகம் குருவாகும்.
உருவத்தில் பெரிய கிரகம் குரு என்பதால் உடல் உறுப்புகளில் பெரியவை குருவுக்கு உரியனவாகும். உடல் வெளி உறுப்புகளில் மிகவும் பெரியது தொடியாகும். தொடையில்தான் அதிகம் கொழுப்பு தங்கியிருக்கும். உடல் உள்ளுறுப்புகளில் பெரியது கல்லீரலாகும். எனவே தொடை மற்றும் கல்லீரலை குறிப்பது குருவாகும்.
குரு மஞ்சள் நிறமுடையது என்பதால் மஞ்சள் நிற உலோகமான தங்கம், மஞ்சள் நிற ரத்தினமான புஷ்பராகம், மஞ்சள் நிற மலரான முல்லை ஆகியவை குருவிற்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.
உருவத்தில் பெரியதும், நீண்ட சுவாசத்தை  உடையதும், நிதானமான நடையுடையதுமான யானை குருவிற்குரிய விலங்காகும்.
உருவத்தில் பெரியதாகவும், அதிகப்படியாக பிராண சக்தியை வெளியிடும் மரங்களான ஆல மரம், அரச மரம் போன்றவை குருவிற்குரியவையாகும்.
குருவின் நிறமும் மஞ்சள் , தீபம் மற்றும் ஹோமத்தீயின் நிறமும் மஞ்சள். தீபம் இல்லாத இறை வழிபாடு கிடையாது. மஞ்சள் பொடி, மஞ்சள் கனியான எலுமிச்சை, வாழப்பழம் போன்றவை இறை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. எனவே இறை வழிபாட்டைக்குறிக்கும் கிரகம் குருவாகும்.
குருவின்  நிறம் தீப நெருப்பை ஒத்திருக்கிறது. தீபங்களும், தீப்பந்தங்களும்  இருட்டை விலக்கும் வேலையை செய்கின்றன. குரு என்ற சொல்லின் பொருளும் இருட்டை நீக்குவது என்பதுதான். குருவும் உருவ பலத்தால் அனைத்து கிரக தோசங்களையும் நீக்கும் வலிமையுடையது. எனவே குருவை வழிகாட்டி, ஆசிரியர், குரு நாதர், நலம் விரும்பி என அழைக்கிறார்கள்.
மனிதனுக்கு இயற்கையாக பூமியில் அதிக பிராண சக்தியும்,காந்த சக்தியும் வட கிழக்கு திசையிலிருந்து கிடைக்கிறது. இதானால் வாஸ்து சாஸ்திரத்தில் வட கிழக்கு மூலையை குரு மூலை அல்லது ஈசான்ய மூலை என அழைக்கிறார்கள். மூக்கை அடைத்துவிட்டால் மனிதன் சுவாசிக்க முடியாமல் இறந்து விடுவான் , அது போல் வீட்டில் ஈசான்ய மூலையை முழுவதுமாக மூடிவிட்டால் வீட்டில் இறப்புகள் நிகழும், சந்ததிகள் வளராது.
வாசி யோகம் என்னும் பிராணயாம பயிற்சி ஆன்மீகத்தோடு தொடர்புடையது. இது மூக்கை பிடித்து பயிலும் கலை என்பதால் , மூக்குக்கு காரகனான குருவே இந்த கலைக்கும் அதிபதியாகும்.

27/04/2017 தினபலன்

27/04/2017 தினபலன்

ஹேவிளம்பி வருடம்      சித்திரை 14
பரணி நக்ஷத்திரம்   பிரதமை திதி
வியாழன் கிழமை

மேஷம்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப இன்று நீங்கள் நீண்ட தூரம் பயணித்து பதவி, புகழ் பெறுவீர்கள். லாபம் உண்டு. இறைவழிபாட்டால் நன்மை.
நண்பர்கள் ஆதரவு உண்டு

ரிசபம்
விமர்சனங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உடல் சோர்வாக இருக்கும். பணியில் திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். துக்கம்.

மிதுனம்
கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். துணையுடன் அன்யோன்யம். பயணம் உண்டு. லாபம் உண்டு.

கடகம்
கடன் நோய் உண்டாகும். பகை உண்டாகும். போட்டிகள் ஏற்படும்
கவனமாக இருக்க வேண்டிய நாள்

சிம்மம்
உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கூட்டு முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மனைவி மேல் காதல் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் நடந்தேறும்

கன்னி
சொகுசுப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும். கடன் ஏற்படும். கல்வி உண்டு. தாயிடம் ஆசி பெறுவீர்கள்.

துலாம்
பயணம், இளைய சகோதர சகோதரிகள் ஆதரவு உண்டு. மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி. குலதெய்வ வழிபாடு

விருச்சிகம்
தனவரவு உண்டு. சுக போஜனம் உண்டு.  கல்வி. புதிய விசயங்களை அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு கடன் உண்டாகும்

தனுசு
நற்சிந்தனை, புது முயற்சி, கீர்த்தி,
சகோதரர்களால் நன்மை

மகரம்
வரவும் செலவும் கலந்த நாள். சிவருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

கும்பம்
வெற்றிகரமான நாள். தனவரவு உண்டு. மூத்த சகோதரர்கள் நண்பர்கள் ஆதரவு உண்டு. லாபம் உண்டு.

மீனம்
பட்டம், பதவி, புகழ் உண்டு. தனவரவு உண்டு. புதிய தொழில் வாய்ப்புகள் உண்டு. நன்மையான நாள் இன்று.

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்