Saturday 26 August 2017

குருப்பெயர்ச்சி பலன்கள் 1

குருவே சரணம் குருவே துணை

குருப்பெயர்ச்சி பலன்கள் 1.

நாடி முறையில் கிரக பெயர்ச்சி பலன்கள் அறிவதற்கு முன்பு நாடி ஜோதிடத்தில் சில முக்கிய அடிப்படை விசயங்களை பார்ப்போம்

நாடியில் எந்த கிரகமும் தனித்து பலன்களை தருவதில்லை

ஒரு கிரகம் தான் இருக்கும் வீட்டில் இருந்து 1,2,5,7,9 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களை வலிமையாக பார்க்கும்

3,11,12 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களை மிக குறைந்த வலிமையுடன் பார்க்கும்

ராகு கேதுக்கள் 1,5,9,12 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களை மட்டும் பார்க்கும்

மேற்சொன்ன படி கிரகங்கள் இருந்தால் அதனை கிரக சேர்க்கையாக எடுத்துக் கொள்ளலாம்

 பொதுவாக 4,6,8,10 இல் கிரகங்கள் இருப்பின் கிரக சேர்க்கை இல்லை.

பாரம்பரிய முறையில் குரு பெயர்ச்சி பலன்கள் சந்திரனை மட்டுமே அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்றது.

ஆனால் நாடி முறையில் எழுதினால் ஒவ்வொரு கிரகத்திற்கும் எழுத வேண்டும்.

குருப்பெயர்ச்சி ஆனது கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.

எனவே உங்கள் ஜாதகத்தில் பின்வரும் ராசிகளில் கிரகம் இருந்தால் அந்த கிரகங்களை குரு பார்ப்பார். அதனால் உங்களுக்கு ஏற்படும் பலன்களை நாம் பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தில் துலாம், விருச்சிகம்,  கும்பம், மேஷம், மிதுனம் இவற்றில் எந்த கிரகங்கள் இருந்தாலும் அந்த கிரகங்களை குரு வலிமையுடன் பார்ப்பார்

உங்கள் ஜாதகத்தில் தனுசு, சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் உள்ள கிரகங்களை குறைந்த வலுவுடன் பார்ப்பார்

-ஆச்சார்யா.

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்