Sunday 23 April 2017

அடிப்படை ஜோதிட பாடங்கள்

கிரகங்கள் வானில் சூரியனை ஒரு ஒழுங்குமுறையில் சுற்றி வருகின்றன. ஆனால் புவியிலிருந்து பார்க்கும் போது அவை பூமியை சுற்றி வருவது போல தோன்றுகிறது.

நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் உரையாடும் போது நான் இந்தியா என்ற நாட்டில் தமிழநாடு என்ற மாநிலத்தில் சென்னையில் வசிக்கின்றோம் என்று குறிப்பிடுகின்றோம் அல்லவா

அது போல வானில் கிரகங்கள் தற்போது எங்கு பயணிக்கின்றது என்பதனை அறிய ராசி, நட்சத்திரம், பாதம் முதலியனவற்றால் குறிக்கப்படுகின்றது

ராசி என்பதன் பொருள் மொத்தம் அல்லது கூரு என்று அர்த்தம்.

ராசி மண்டலம் என்பது ஒரு கற்பனை கோடு ஆகும். வானத்தை 12 சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

மண்டலம் என்றால் ஒரு சுற்று என பொருள்படும். எனவே ஒரு சுற்றை 12 பாகமாக பிரித்தால் ஒரு ராசிக்கு 30 பாகை வரும்.

ஜாதகம் கணிப்பதற்கான சூத்திரம்
காலம்+இடம்
நாம் இந்த நாளில் இந்த நேரத்தில் இந்த ஊரில் பிறந்தோம். இதனை பயன்படுத்தியே ஜாதகம் கணிக்கிறோம். ஜாதகன் பிறந்த நேரத்தில் வானில் கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சரிக்கின்றன என்பதை பஞ்சாங்கத்தின் உதவியுடன் கணிக்கின்றோம்

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்